இந்தியா Covid-19

புறப்பட்டது சிறப்பு ரயில்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு கையசைத்து உற்சாகத்துடன் அனுப்பி வைத்த கேரள போலிசார்!

Summary:

Shramik special train started from kerala

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 40 நாட்களாக வேலை, சம்பளம் இல்லாமல் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி அளித்தது.

அதன்படி இரு மாநில ஒப்புதலின்படி முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயில் என அழைக்கப்படும் இந்த ரயில்கள் அனைத்து இடங்களிலும் நிற்காமல் ஒரு மாநிலத்தின் ஒரு இடத்திலிருந்து வேறு மாநிலத்தின் ஒரு இடத்திற்கு மட்டும் செல்லும்.

நேற்று மட்டும் இந்தியாவில் 6 இடங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் புறப்பட்டன். அதில் ஒரு ரயில் கேரளா மாநிலம் ஆலுவா ரயில் நிலையத்தில் இருந்து 1148 பயணிகளுடன் புவனேஷ்வருக்கு சென்றது. 

வெவ்வேறு இடங்களில் இருந்து அரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட ஊழியர்கள் பரிசோதனைக்கு பிறகு ரயிலில் அமர்தப்பட்டனர். ரயில் புறப்பட்டதும் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போலீசார் கையசைத்து அவர்களை வழியனுப்பினர்.


Advertisement