ஐயோ கருமம்... லேடிஸ் ஹாஸ்டல் முன்னாடி செய்ற வேலையா இது.? இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு.!shocking-in-delhi-man-doing-obscene-activities-infront

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது.  தற்போது இது போன்ற ஒரு சம்பவம் நடந்து நாட்டையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

டெல்லியில் அமைந்துள்ள ஹட்சன் லேன் பகுதியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தான் இந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு  புழுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் பால்கனியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தனது ஆடைகளை கலைத்துவிட்டு பெண்களை நோட்டமிட்டவாறு சுய இன்பம் செய்யத் தொடங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் அந்த நபரை வீடியோ எடுத்து இது தொடர்பாக புகார் அளித்தனர். புகார் அளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என  மகளிர்ஆணையம் குற்றம் சாட்டி இருக்கிறது.

மேலும் இந்த குற்ற சம்பவம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மகளிர் ஆணைய தலைவர் சுவாதி சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டும் இன்னும் காவல்துறை தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் ஆபத்தானவை இவற்றிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும்  காவல் ஆய்வாளர் இமேஜ் ஜூன் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருக்கிறார்.