அதிர்ச்சி.. பெண் மருத்துவர் தற்கொலை.. திருமணத்திற்கு வரதட்சணையாக150 பவுன் நகை மற்றும் பி.எம்.டபிள்யூ கார் கேட்ட காதலனின் குடும்பத்தார்..!

அதிர்ச்சி.. பெண் மருத்துவர் தற்கொலை.. திருமணத்திற்கு வரதட்சணையாக150 பவுன் நகை மற்றும் பி.எம்.டபிள்யூ கார் கேட்ட காதலனின் குடும்பத்தார்..!


Shocking.. female doctor committed suicide.. boyfriend's family asked for 150 pounds jewelry and BMW car as dowry for marriage..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் ஷஹானா. இவருக்கு கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் இரவு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் பணிக்கு வராததால் சக நண்பர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ஷஹானா தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் அருகே கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில்" படிப்பிற்கும் திருமணத்திற்கும் நிறைய பணம் வேண்டும் யாரையும் நம்பி இருக்க முடியாது பணம் மட்டும் தான் இங்கே முக்கியம்" என்று எழுதப்பட்டிருந்தது.

Female doctor

இதனையடுத்து இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஷஹானா தன்னுடன் பணிபுரியும் சக மருத்துவரான ரூவைஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு ரூவைஸ் குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் 150 சவரன் நகை ,15 ஏக்கர் நிலம் மற்றும் பி.எம்.டபிள்யூ கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஷஹானாவின் குடும்பத்தாரால் ரூவைஸின் குடும்பத்தார் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியாமல் திருமணம் நின்றுவிட்டது. இதனால் மனம் உடைந்து போன ஷஹானா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரூவைஸை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.