அடக்கொடுமையே... குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர்... தந்தை மற்றும் மகள் பரிதாப பலி.!

அடக்கொடுமையே... குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர்... தந்தை மற்றும் மகள் பரிதாப பலி.!


shock-in-kerala-the-jewelry-shop-owner-who-tried-to-com

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நகைக் கடை உரிமையாளர் அவரது குடும்பத்துடன் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நகைக்கடை உரிமையாளரும் அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் தலைநகரான பெரிங்கம்மலை பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜன்(56). இவரது மனைவி பிந்து(51). இந்த தம்பதியினருக்கு அபிராமி (22), அர்ஜூன் (20)  என்ற இரண்டு பிள்ளைகள்  இருந்தனர். இவர்களுடன் சிவராஜன் என் தாயும் வசித்து வருகிறார். யுவராஜன் புளியங்குடி என்ற பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார்.

Indiaஇந்நிலையில் நேற்று இரவு உணவு அருந்திய  சிவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர்  அவர்களது அறையில் இருந்து வெளியே வர தாமதமானதால் அவரது தாயார் அங்கு சென்று கதவை தட்டி இருக்கிறார். அப்போது சிவராஜனின் மகன் அர்ஜுன் மயக்கத்தில் வந்து கதவை திறந்து இருக்கிறார். மேலும் தனது பாட்டியிடம்  நான்கு பேரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரே விழிஞ்ஞம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

Indiaஇதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி சிவராஜன் மற்றும் அவரது  மகள் அபிராமி ஆகியோர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர். அர்ஜுன் மற்றும் அவரது தாயார் விந்து ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் எதற்காக குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.