விரைவில் திருமணம்! 10 ஆண்டுகளாக வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பின் நடந்த அற்புதம்!

விரைவில் திருமணம்! 10 ஆண்டுகளாக வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பின் நடந்த அற்புதம்!


shirt-button-inside-girl-nose

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வந்த 22 வயது நிறைந்த இளம்பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டநிலையில் அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அந்த இளம்பெண் கடந்த 10 வருடங்களாக மூக்கு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தநிலையில் அவர்களும் தங்கள் மகளை பல இடங்களுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால்எங்கும்  இந்த பிரச்சனைக்கான காரணம் குறித்து கண்டறியமுடியவில்லை. மேலும் அதனை சரிசெய்யவும் முடியவில்லை.

nose

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே இந்த பிரச்சனையை எப்படியாவது சரிசெய்துவிடவேண்டும் என்று எண்ணிய அப்பெண்ணின்   பெற்றோர்கள் அவரை பட்டாம்மில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது மூக்கை ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அவரது மூக்கின் உள்ளே சட்டை பட்டன் இருப்பது தெரிவந்தது.

மேலும் மூக்கில் சதையும் வளர்ந்து இருந்துள்ளது. இதனாலே அந்த பெண் மூச்சு விடுவதற்காக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனை தெடர்ந்து உடனடியாக, அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மூக்கிலிருந்த சட்டை பட்டனை வெளியே எடுத்தனர்.