தலைநகரில் கடுமையான காற்று மாசுபாடு.. தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை.. அரசு அறிவிப்பு..!

தலைநகரில் கடுமையான காற்று மாசுபாடு.. தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை.. அரசு அறிவிப்பு..!



severe-air-pollution-in-the-capital-holidays-for-primar

தலைநகர் டெல்லியில் சமீப காலமாகவே காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த காற்று மாசுபடுதலை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது‌.

delhi

இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக காற்று மாசின் குறியீடு 400க்கும் அதிகமான அளவில் இருப்பதால் இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பிற மாநிலங்களில் இருந்து பிஎஸ் 6 கார்பன் உமிழ்வு விதிமுறைகளைப் பின்பற்றாத அனைத்து வாகனங்களும் தலைநகருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.