
வேப்ப மரப்பட்டை சாறால் குணமாகும் கொரோனா?.. ஆய்வில் இன்ப தகவல்..!
கொரோனா வைரஸ் குறைத்த ஆராய்ச்சி மற்றும் அதனை தடுப்பதற்கான பல்வேறு மருத்துவர்களின் உற்பத்தி தொடர்பாகவும் உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளர்களும் இதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய நாட்டினை பூர்வீகமாக கொண்டுள்ள வேப்பமரம் ஒட்டுண்ணி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்டது ஆகும். இது ஆயிரக்கணக்கனான வருடமாக இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேப்பமரத்தின் பட்டை சாறு மலேரியா, வயிற்று மற்றும் குடல் புண், தோல் நோய்களை குணப்படுத்த, அதற்கான சிகிச்சை அளிக்க உதவி செய்கிறது. வெப்பமரப்பட்டியின் கூறுகளில், வைரஸின் புரதத்தை குறிவைத்து அளிக்கிறது. இது, கொரோனா உட்பட பிற மாறுபாடு வகை கொண்ட உருமாறிய கொரோனா எதிர்ப்பு மருந்தாக செயல்படும் திறனை கொண்டுள்ளது.
வேப்பமரத்தின் பட்டை சாறுகளை விலங்குகளுக்கு கொடுத்து நடத்திய பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு சக்தி இருப்பதும் உறுதியானது. வேப்பமர சாறுகள் பல இடங்களில் கொரோனா வைரஸின் பைக் புத்தரத்தோடு பிணைந்து, வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் கொலராடோ மாகாண பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement