பிப்ரவரி 15 ஆம் தேதிவரை இழுத்து மூடல்!! கொரோனா நடவடிக்கையாக மகாராஷ்டிரா அரசு முக்கிய முடிவு..



schools and colleges closed in Maharashtraபிப்ரவரி 15 வரை மூடல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா 3 வது அலையானாது இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

corona

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், சினிமா அரங்குகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.