ஆங்கில ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்! இன்று தள்ளுவண்டி வேலை செய்யும் சூழ்நிலை.! கொரோனாவால் மாறிய வாழ்க்கை.!

ஆங்கில ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்! இன்று தள்ளுவண்டி வேலை செய்யும் சூழ்நிலை.! கொரோனாவால் மாறிய வாழ்க்கை.!


school-teacher-sales-vegetables

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போதுவரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஊரடங்கு காரணமாக இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் தற்போது சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் அவற்றில் சில இயங்கி வருகின்றன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் பெரும்பாலானோர் சம்பளம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் ஒப்பந்த ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் வசிர் சிங். தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இவர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தேன். மே 8 முதல் எனக்கு சம்பளம் வரவில்லை. இதனால் வேறுவழியின்றி காய்கறி விற்பனையில் இறங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார். கொரோனா பரவல் இன்றளவும் குறையாத நிலையில் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.