தாய் மகன் என கூறி, ரூம் எடுத்து மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை!.

தாய் மகன் என கூறி, ரூம் எடுத்து மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை!.


school teacher affair with student


கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெரோனா. இவர் ஆலப்புழா அருகே சேர்த்தலா முகம்மா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசியராக பணியாற்றி வந்துள்ளார்.

திருமணமான இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 40 வயது நிரம்பிய இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை விட்டுப் பிரிந்து, தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் பெரோனாவுக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவன் இயல்பாகவே அனைவரிடமும் கலகலவென்று பேசுவான், இதனால் பெரோனாவுக்கு மாணவனை மிகவும் பிடித்துள்ளது. நாளடைவில், அந்த டீச்சரும், மாணவனும் காதலிக்கத் துவங்கினர். இதற்குப் பரிசாக, அந்த டீச்சர், அந்த மாணவனுக்கு செல்போன் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்துள்ளார். 

இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின்னரும் போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இதனையடுத்து  கடந்த 23-ஆம் தேதி மாணவனை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார் செல்ஃபோன் சிக்னல் மூலம் ஆசிரியை சென்னை சூளைமேட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சென்னை சென்ற கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியோடு தேடி வந்தனர். இதனிடையே விடுதி ஒன்றில் ஓய்வெடுக்கச் சென்ற கேரள போலீசார் அங்கு அவர்களின் புகைப்படங்களை காண்பித்து விசாரித்த போது இருவரும் தாய் - மகன் எனக் கூறிக் கொண்டு கடந்த 4 நாட்களாக தங்கியிருப்பது தெரியவந்தது.