வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
நடுரோட்டில் பள்ளி சீருடையில் காதலர்கள் செய்த செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்... வைரலாகும் வீடியோ!!
தற்போது சமூக வலைத்தளத்தில் எப்படியாவது ட்ரெண்டாக வேண்டும் என்பதற்காக வித்தியாசமான வீடியோகளை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். அதிலும் பள்ளி மாணவர்கள் செய்யும் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாமல் போயுள்ளது.
இன்னும் சில தினங்களில் காதலர்கள் தினம் வரவுள்ளதால் இணையத்தில் காதலர்களின் வித்தியாசமான வீடியோகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு காதல் ஜோடி செய்த செயல் இணையத்தில் உலாவி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் அதிக லைக்ஸ்கள் பெற வேண்டும் என்பதற்காக பள்ளி சீருடையில் நடுரோட்டில் மாணவி ஒருவர் புத்தக பையுடன் நிற்க அவரின் முகத்தில் சாயம் பூசி ரொமான்ஸ் செய்வதை போன்று மாணவியின் நெற்றியில் குங்குமம் பூசியை வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது பள்ளி மாணவர்கள் செய்யும் செயலே கிடையாது என கமெண்ட் செய்து வருகின்றனர்.