இந்தியா

வேகமெடுக்கும் ஹிஜாப் விவகாரம்..! மூடப்படும் பள்ளி, கல்லூரிகள்.!

Summary:

வேகமெடுக்கும் ஹிஜாப் விவகாரம்..! மூடப்படும் பள்ளி, கல்லூரிகள்.!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் ஒரு கல்லூரியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு பதிலடியாக இந்து மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர்.

ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவி துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், நேற்று ஒரு கல்லூரியில்  இந்துத்துவா மாணவர்களுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இந்த நிலையில், ஹிஜாப் சர்ச்சையால் இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை 11 மற்றும் 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை தொடர்ந்து மூடி வைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.  கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement