ரயில் பின்னோக்கி ஓடி பாத்துருக்கீங்களா..? 35 கி.மீ பின்னோக்கி ஓடிய சதாப்தி ரயில்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..Sathapthi trani running backward viral video

சதாப்தி விரைவு ரயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டநிலையில் ரயில் திடீரெனெ பின்னோக்கி ஓட தொடங்கியது. சுமார் 35 கி.மீ தூரம்வரை பின்னோக்கி ஓடிய சதாப்தி விரைவு ரயில் அதிர்ஷ்டவசமாக தடம் புரளவில்லை என்பதால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பினர்.

காத்திமா ரயில் நிலையம் வரை பின்னோக்கி ஓடிய ரயில் பின்னர் நிறுத்தப்பட்டு, ரயில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். மேலும் பயணிகள் மாற்று ரயில் மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தண்டவாளத்தில் நின்று மாடுகள் மீது மோதாமல் இருக்க ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டதாகவும், ஆனால் ரயிலின் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மாட்டின் மீது மோதிவிட்டதாகவும், பின்னர் ரயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரயில் பின்னோக்கி ஓடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.