தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அடக்கொடுமையே.! புடவை கட்டினால் புற்றுநோய் ஆபத்து.! பெண்களே உஷார்.!
சமீப காலமாக புடவை புற்றுநோய் அதிகரிக்க துவங்கியுள்ளது. இது எதனால் வருகிறது என்பது குறித்து பார்க்கலாம். புடவை அணிந்தால் முதலில் பருத்தியால் செய்யப்பட்ட பாவாடையை அணிய வேண்டும். அதை ஒரு கயிற்றால் வயிற்றில் இறுக்கி கட்டிக் கொண்டு அதில் சேலையை சொருகி கட்டுவது வழக்கம். இது போல ஒரே இடத்தில் நீண்ட நேரம் இறுக்கமான ஒரு உடையை அணியும் போது, தோலில் அழுத்தம் ஏற்பட்டு கருப்பாகி தோல் உரிய ஆரம்பிக்கும். இதுபோல தொடர்ந்து நடப்பதால் மீண்டும் மீண்டும் தோல் உரியும்போது புற்றுநோய் ஏற்பட தோன்றுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புடவை கேன்சரை பொருத்தமட்டில் அணியும் புடவை சுத்தமாக இருப்பது முக்கியம். அதிகப்படியான ஈரம் மற்றும் அதிகப்படியான வெப்பம் காரணமாக இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறதாம்.
ஜார்கண்ட் மற்றும் பீகார் பகுதிகளில் இந்த வகை கேன்சர்கள் அதிக அளவில் பதிவாகி இருக்கின்றன. நாடு முழுவதும் இருக்கின்ற பெண்களுக்கு கண்டறியப்படுகின்ற புற்றுநோய் வகைகளில் ஒரு சதவீதம் அளவில் புடவை கேன்சர் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை மருத்துவ மொழியில் Squamous Cell Carcinoma (SCC) என கூறுகின்றனர்.
மும்பை ஆர்என் கூப்பர் மருத்துவமனையில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுது. தனது 13 வயது முதல் புடவை கட்டி வரும் ஒரு 68 வயது மூதாட்டிக்கு இந்த கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது. இது போலவே காஷ்மீரில் அதிகபட்சமாக காங்க்ரி கேன்சர் காணப்படுகிறது. தோல் புற்றுநோயான இது காஷ்மீரில் மட்டும்தான் ஏற்படுகிறது.
பனிக்காலத்தில் அங்கிருக்கும் மக்கள் நெருப்பில் அமர்வதால் அவர்களது வயிறு மற்றும் தொடை பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் சூட்டினால் இந்த வகை கேன்சர் உருவாவது தெரியவந்துள்ளது. இது போன்ற புற்றுநோய் அனைத்தும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் தான் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் ஜீன்ஸ், இறுக்கமான பேண்ட் உள்ளிட்டவற்றை அணியும் போது உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் தடைபடுகிறது. இதனால், வெப்ப நிலையானது உடலில் அதிகரிக்கும். எனவே, ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையானது குறைவதுடன் பெண்களுக்கு ஓவரியன் புற்றுநோய் உருவாகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த ஜீன்ஸ் அணிவது குறித்த ஆய்வுகள் எதுவும் இதுவரை உறுதியான முடிவுகளை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.