இந்தியா

ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டு, ஒரே நாளில் தாயாக மாறிய இரட்டை சகோதரிகள்.! ஆச்சரிய சம்பவம்.!!

Summary:

ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டு, ஒரே நாளில் தாயாக மாறிய இரட்டை சகோதரிகள்.! ஆச்சரிய சம்பவம்.!!

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் நடந்த இரட்டை சகோதரிகளுக்கு, ஒரே நாளில் பிரசவமும் நடந்திருப்பது அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் நாயர். முன்னாள் இராணுவ வீரரான இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் நடக்க வேண்டும் என்று இரட்டை சகோதரிகள் ஆசைப்பட்டனர். 

இந்நிலையில், ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீலட்சுமி இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இருவருமே கர்ப்பமானதால், தாங்கள் எங்கு குழந்தைகளாக பிறந்தோமோ அதே மருத்துவமனையில் எங்களுக்கு பிரசவம் நடக்க வேண்டும் என்று இருவரும் விரும்பியுள்ளனர்.

இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு அவரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்தநிலையில், நேற்று முன் தினம் பிற்பகல் ஸ்ரீபிரியாவுக்கு பெண் குழந்தையும், மாலையில் ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுவும் பிறந்த குழந்தைகளுக்கு ஒரே குரூப் ரத்தம் என்பது மேலும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Advertisement