சபரிமலை சென்ற கர்நாடக ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்.!Sabarimala Iyyappan Temple Devotes Travel Van Lorry Crash 3 Died on Spot 12 Injured

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், வேனில் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சென்றுகொண்டு இருந்தனர். இவர்கள் இன்று அதிகாலை நேரத்தில் மலப்பரம்பு - வெங்கலம் புறவழிச்சாலையில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக எதிர்திசையில் வந்த டிப்பர் லாரியின் மீது வேன் மோதி விபத்திற்குள்ளாகவே, இந்த விபத்தில் வேனின் ஓட்டுநர் உட்பட 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Sabarimala

மேலும், வேனில் பயணம் செய்த 12 ஐயப்ப பக்தர்களும் படுகாயம் அடைந்து அலறித்துடித்தனர். விபத்து சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி மக்கள், ஐயப்ப பக்தர்களை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.