சூப்பர் சார்.! கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.!

சூப்பர் சார்.! கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.!


rs-5-lakh-financial-assistance-to-the-family-of-a-gover

கொரோனா இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில், பல மாநிலங்களில் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காக மக்கள் அல்லாடி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலியான அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

corona

இதனையடுத்து மத்தியபிரதேசத்தில் கொரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.