புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வித்தியாசமா இருக்கே.. இந்த தகவல் பலகை எதற்கு அறிகுறி?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
சாலைகளில் நாம் பயணம் செய்யும்போது, அந்தந்த இடத்தின் நிலை மற்றும் தமைக்கேற்ப, தகவல் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும். பெரும்பாலும் சாதாரணமான சாலைகளில் வேகத்தடை எச்சரிக்கை பலகையில் தொடங்கி, வேகத்தின் வரம்பு, வளைவுப்பாதை, முந்திச்செல்லதே, இடப்புறம் செல்லும் சாலை, விபத்து பகுதி கவனமாக செல்லவும் என பல விதமான தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.
சாலை சமிக்கை எச்சரிக்கை குறியீடுகள்
குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடங்களில், மக்கள் அதிகம் பாதைகளை கடக்கும் இடங்களில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடம் என்பதை உறுதி செய்ய சிறார் கைப்பையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்ற பலகையை இருக்கும். அங்கு ஒலி எழுப்பக்கூடாது என்பதற்காக ஒலி எழுப்ப தடை செய்யப்பட்டதற்கான அடையாளத்துடன் பலகை இருக்கும். அதேபோல மருத்துவமனையை ஒட்டியும் இடம்பெற்றிருக்கும்.
இதையும் படிங்க: தாத்தாவின் வேட்டியில் ராக்கெட் விட்ட இளைஞர்; இது தீபாவளி பரிதாபங்கள்.. வைரல் வீடியோ உள்ளே.!
முக்கோணத்திற்குள் வட்டம்
இதனிடையே, சாலையில் முக்கோண அளவிலான பதாகையை, நான்கு புள்ளிகள் வைக்கப்பட்டு பலகை ஒன்று இருந்தது. இது எந்த விதமான சமிக்கை பலகை என்பதை அறியாதவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அதாவது, இவ்வாறான மேலுள்ள புகைப்படத்தில் இருக்கும் சமிக்கை பலகைகள், பெரும்பாலும் பார்வையற்ற பள்ளிகள் இருக்கும் இடத்தில் அல்லது பார்வையற்றோர் அதிகம் இருக்கும் இடத்தில் இவ்வாறான சமிக்கை பலகை இடம்பெறும்.
இதையும் படிங்க: சூதாட்டத்தை கண்டித்த iகாவலர்கள் மீது கொடூர தாக்குதல்; சிறப்பாக கவனித்து அனுப்பிய அதிகாரிகள்..! ஐயோ., அம்மா கதறல்.!