அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவன துணை ஆசிரியர் மர்மச்சாவு.. பெங்களூரில் சடலமாக மீட்பு..!
உலகளவில் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ்-ன் பெங்களூர் அலுவலக துணை ஆசிரியர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு, வித்யா நகரை சேர்ந்தவர் சுருதி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரில், கணவர் அனீஷுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சுருதி உலகப்புகழ்பெற்ற 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றிவிட்டு, வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று தலிபரம்பாக்கம் பவுதியில் உள்ள சொந்த வீட்டிற்கு அனிஷ் சென்றுள்ளார். சுருதியின் தாய் தனது மகளை செல்போனில் அழைத்து பேச முயற்சித்துள்ளார்.
அவர் பலமுறை அழைத்தும் போனை எடுக்காத காரணத்தால், பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வரும் சுருதியின் சகோதரர் நிஷாந்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிக்கு தொடர்பு கொண்டு சுருதியை அழைக்க கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து, செக்கியூரிட்டி சுருதியின் வீட்டிற்கு சென்றபோது, அவரின் வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த நிஷாந்த் வீட்டிற்கு வந்து, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது சுருதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாந்த் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து சுருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.