கேரளாவில் வெள்ளத்தால் வீடுகள் சரிந்து செல்லும் பதறவைக்கும் வீடியோ!.

கேரளாவில் வெள்ளத்தால் வீடுகள் சரிந்து செல்லும் பதறவைக்கும் வீடியோ!.



rescue-team-saved-people-from-flood


கேரளாவில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது.  எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் பேய்  மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

  கன மழை காரணமாக வீதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடியதால், கேரளாவில் இருந்த வீடுகள் அப்படியே அடித்துச்செல்லப்படுகின்றன.



இன்று முதல் சற்று மழை குறையலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை,  மீட்பு படையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுவருகின்றனர்.  உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அவர்கள் உணவுகளை ஹெலிகாப்டர் மூலம் சென்று அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.


கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று நிலச்சரிவால் மளமளவென சரிந்து விழும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.