ரீல்ஸ் மோகம்.. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்..!

ரீல்ஸ் மோகம்.. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்..!



reels-craze-tragedy-that-happened-to-the-boy-heartbreak

இன்றைய நவீன உலகில் வாழும் மக்கள் செல்போனுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரீல்ஸ் எடுத்து இணையத்தில் பதிவிடுவதில் இன்றைய இளசுகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரீல்ஸ் எடுக்கும் போது ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஜஹாங்கிர்பாத்தில் உள்ள தேரா தௌலத்பூரில் வசித்து வருபவர் 14 வயது நிரம்பிய ஃபர்மான் என்ற சிறுவன். இவர் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கி எங்கு சென்றாலும் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிறக்கம் செய்து வந்துள்ளார். 

Reels craze

இந்நிலையில் சம்பவத்தன்று ஃபர்மான் தனது செல்போனில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது.இதில் ஃபர்மான் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஃபர்மானின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.