இந்தியா

தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் மருத்துவர். நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

Reason leaked for lady doctor payal thatvi suicide case

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி மும்பையை சேர்ந்த பயல் தட்வி என்ற பெண் மருத்துவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரவலாக பேசப்பட்ட நிலையில் அந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சக பெண் மருத்துவர்கள் சாதி ரீதியாக பேசி தன்னை துன்புறுத்தியதாலும், அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான காரணத்தால் தற்கொலை செய்துகொள்வதாக பயல் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் மூன்று பெண் மருத்துவர்களின் பெயர்களையும், அவர்கள் தன்னை எப்படியெல்லாம் கொடுமை படுத்தியதாகவும் பயல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு HIV பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது கத்தி பயல் கையில் குத்திவிட்டதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பயல் விடுமுறை கேட்டும் அந்த 3 பெண் மருத்துவர்களில் ஒருவர் இவருக்கு விடுமுறை தர மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பயல் வேறு வழியின்றி தேர்க்கொலை செய்துகொண்டுள்ளார்.
 


Advertisement