"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
என்னது.. தேசியக்கொடி வாங்கினால்தான் ரேஷன் பொருட்களா.? வெடித்த சர்ச்சை.! மத்திய அரசு விளக்கம்.!
இந்திய நாட்டில் 75-வது சுதந்திர தினவிழா இன்னும் ஒரு சில தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அதனை கோலாகலமாக கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் தேசியகொடியை டிபியாக வைக்கவும், வீடுகள் தோறும் தேசியகொடியை ஏற்றுமாறும் மத்திய அரசு பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது.
இதற்கிடையில் ஹரியானா மாநிலத்தில் ரேஷன் கடையில் தேசியகொடியை வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கபட்டதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை 'நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. தேசிய கொடி விற்பனை செய்வது குறித்து விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசிய கொடி வாங்குமாறு நுகர்வோரை வற்புறுத்தக்கூடாது என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.