திருமண கொண்டாட்டத்தில் காருக்குள் இருந்த 3 வயது மகளை மறந்த பெற்றோர்; மூச்சுத்திணறி பரிதாப பலி.!Rajasthan Kota Minor Girl Died suffocation 

பூட்டப்பட்ட காரில் நீண்ட நேரம் காற்றுபுகாமல் இருப்பதால், பிராணவாயு தீர்ந்து மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது பலராலும் அறியப்பட்ட விஷயம் எனினும், அலட்சியம் சில நேரங்களில் மனித உயிர்களை பலியாக்கி விடுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டம், ஜோராவார்புரா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் நகர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் இளைய மகள் கோர்விகா. சம்பவத்தன்று பிரதீப் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். காரில் இவர்கள் சென்ற நிலையில், வாசலில் மனைவி மற்றும் மூத்த மகள் இறங்கிக்கொண்டுள்ளனர்.

3 வயது மகளை மறந்த தந்தை: 

காரிலேயே இளையமகள் இருப்பதை மறந்துபோன பிரதீப், தனது காரை நிறுத்திவிட்டு திருமண மண்டபத்திற்குள் சென்றுள்ளார். பின் இருவரும் அவரவர் தரப்பு உறவினர்களுடன் இணைந்துகொண்டதால், குழந்தை கணவரிடம் இருக்கும் என மனைவியும், மனைவியிடம் இருக்கும் என கணவரும் நினைத்துக்கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: 4 மாத பெண் குழந்தையை ரூ.100க்கு விற்ற கொடூர தாய்.! அதுவும் எதற்காக?? அதிரவைக்கும் பின்னணி!!

உண்மை அறிந்து அதிர்ந்துபோன தம்பதி

கிட்டத்தட்ட 2 மணிநேரம் கழித்து இவர்கள் சந்தித்து குழந்தை குறித்து கேட்டபோது உண்மை தெரியவரவே, அவர் விரைந்து சென்று காருக்குள் பார்த்தபோது, சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

3 வயது சிறுமி பரிதாப பலி

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுமியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கார் மூடி இருந்ததால் குழந்தை சுவாசம் கிடைக்காமல் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பாத்ரூமில் தனக்கு தானே பிரசவம்.! பிய்ந்து கையோடு வந்த கால்கள்.! இளம்நர்ஸ் செய்த அதிர்ச்சி காரியம்!!