இந்தியா

ஹோலி கொண்டாட்டம்! இந்த பொருள்களை வாங்குவதை தவிர்த்து விடுங்கள்! சுகாதார மந்திரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Summary:

rajasthan health minister advised on holi celebration

வட இந்தியாவில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக பகையை மறந்து ஒன்றாக கொண்டாடும் வண்ணமயமாக கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை. அன்றைய தினத்தில் வடமாநில மக்கள் அனைவரும் வண்ண வண்ண பொடிகளை மற்றவர்கள் மீது பூசி மகிழ்வர். மேலும்  இனிப்பு பொருட்கள் வழங்குதல், புத்தாடை அணிந்து கோலாகலமாக கொண்டாடுவர்.

இந்நிலையில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில்  இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 43 நபர்கள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்திருந்தனர். ஆனாலும் ஹோலி கொண்டாட்டம் நாட்டின் பலபகுதிகளில் 
வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ஆளும் காங்கிரஸ் சுகாதார மந்திரி  ரகு சர்மா, ராஜஸ்தானில் நிலைமை கட்டுக்குள்ளேதான் உள்ளது. ஆனாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் சீன பொருட்கள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ரசாயன பொருள்கள் கலந்த பொடிகள் வாங்குவதை தவிர்த்து விட்டு இயற்கை வண்ணப் பொடி அல்லது குலால் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.


Advertisement