பள்ளியின் பெயருக்காக அதிர்ச்சி செயல்; கூட்டுப்பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் படிப்பு நிறுத்திவைப்பு.! Rajasthan Girl Rape School Education Stopped 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், பதின்ம வயது சிறுமி 11ம் வகுப்பு பயின்று வந்தார். 

சிறுமி கடந்த ஆண்டு பள்ளிக்கு சென்றபோது ஐவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். 

அங்கு சிறுமி படிப்பை தொடர முயற்சித்தபோது, அவருக்கு பள்ளி நிர்வாகம் வாய்ப்பை மறுத்து இருக்கிறது. மேலும், சிறுமி மேற்படி படிக்க அனுமதி தந்தால், தங்கள் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் எனவும் கூறி இருக்கின்றனர். 

இதனால் மேற்படி படிக்க இயலாமல் அவதிப்பட்ட சிறுமி, தற்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உதவியுடன் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்.