15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனின் மீது பரபரப்பு வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!



Rajasthan Congress MLA Son and Friends Gang Rapped Minor Girl FIR Registered

10 ஆம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமியை, காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த எம்.எல்.ஏ-வின் மகன் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆள்வார் ராஜ்கர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜோஹ்ரி லால் மீனா. இவரின் மகன் தீபக் மீனா. தீபக்கின் நண்பர்கள் விவேக் சர்மா தும்டா, நேத்ரம் சம்லேதி. இம்மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டம், மாண்டவார் பகுதியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி இருக்கிறார். 

rajasthan

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக எம்.எல்.ஏ மகன் தீபக் மற்றும் அவனின் 2 நண்பர்கள் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்து, விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்திடுவோம். விடீயோவையும் இணையத்தில் பதிவிடுவோம். நாங்கள் அழைக்கும்போதெல்லாம் எங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அனுப்பி வைத்துள்ளனர். 

rajasthan

இதனால் பயந்துபோன சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே கூற இயலாமல் தவித்த நிலையில், பல நேரங்களில் சிறுமியை விடுதிக்கு வரவழைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளனர். ஒரு சமயத்திற்கு மேல் மனதுடைந்த சிறுமி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.