தண்டவாளத்தில் அமர்ந்து ப்ரீ பயர் விளையாடிய அண்ணன் - தம்பி இரயில் மோதி சாவு.!

தண்டவாளத்தில் அமர்ந்து ப்ரீ பயர் விளையாடிய அண்ணன் - தம்பி இரயில் மோதி சாவு.!



Rajasthan Alwar District 2 Man Died Hit by Train They Play PUBG Game on Railway Track

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் லோகேஷ், ராகுல். இவர்கள் இருவரும் அண்ணன் - தம்பி ஆவார்கள். பப்ஜி கேமில் இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளனர். 

இருவரையும் குடும்பத்தினர் கண்டித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் கேமில் தீவிரம் காண்பித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் போட்டித்தேர்வுக்கு தயாராகியும் வந்துள்ளனர்.

rajasthan

இந்நிலையில், வீட்டில் படிக்கச் செல்வதாக கூறிவிட்டு, அங்குள்ள தண்டவாளப்பகுதிக்கு சென்று பப்ஜி கேம் விளையாடியுள்ளனர். அப்போது, அவ்வழியாக இரயில் வந்துகொண்டு இருந்த நிலையில், இரயில் எஞ்சின் ஓட்டுநர் ஒலி எழுப்பியும் கண்டுகொள்ளவில்லை. 

இருவரும் கேமில் மும்மரமாக இருந்து விளையாட தொடங்கிய நிலையில், இருவரும் இரயில் மோதி பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.