நிரந்தர பிரதமர் கனவு பலிக்காது!!: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி..!!

நிரந்தர பிரதமர் கனவு பலிக்காது!!: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி..!!


Rahul Gandhi said that BJP's dream of permanent rule will not come true

பா.ஜனதா கட்சியினரின் நிரந்தர ஆட்சி கனவு பலிக்காது என்று லண்டனில் பேசிய ராகுல் காந்தி கூறியுள்ளார்.

லண்டன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவரான ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, தொடர்ந்து சாத்தம் ஹவுஸ் என்ற சிந்தனையாளர் பேரவையில் ஆற்றிய உரை பின்வருமாறு:-

இந்தியா விடுதலை அடைந்த காலகட்டம் தொடங்கி தற்போது வரை பெரும்பாலான காலகட்டங்களில் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டோம், இனிமேல் நிரந்தரமாக ஆட்சி செய்யலாம் என்று பா.ஜனதா கட்சியினர் கனவு காண்கின்றனர். அந்த கனவு நிச்சயம் பலிக்கப் போவதில்லை. ஏனெனில், இந்திய ஜனநாயகத்தை பழுது பார்க்கும் பணியை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ் என்பது ரகசிய சமூகம். அது இஸ்லாமிய சகோதரத்துவத்தின் பாதையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அடிப்படைவாத, பாசிச அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஊடகத்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் கமிஷன் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் மீது ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது அல்லது அச்சுறுத்தி வருகிறது. ஜனநாயக அமைப்புகள் பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.