அரசியல் இந்தியா

தடையை மீறி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது.! பரபரப்பு சம்பவம்!

Summary:

Rahul gandhi arrest

ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

 உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூர சம்பவத்தால் மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. முன்னெச்சரிக்கையாக ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து டெல்லியில் இருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக புறப்பட்ட ராகுல், பிரியங்கா சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் நடந்தே ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் வந்த தொண்டர்களை உத்திரப்பிரதேச மாநில போலீசாரும் மற்றும் டெல்லி போலீசாரும் சேர்ந்து தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் காங்கிரஸ் தொண்டர்களை தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்குவாதத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Advertisement