இந்தியா

மாணவிகளின் உள்ளாடையை கழற்றி சோதனை! பள்ளி ஆசிரியை கொடூரம்!

Summary:

Punjab teacher removed girls students clothes

நாளுக்குநாள் பள்ளி மாணவர்களுக்கு எதிரான கொடுமைகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. உதாரணத்திற்கு பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் 12 ஆம் வகுப்பு மாணவனை பாலியல் துன்புறுத்தல் செய்தது, பின்னர் காவல் நிலையம் சென்றது என நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் அணைத்து மாணவிகளின் ஆடைகளையும் களைந்து சோதனை செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தின் பால்ஷிகா மாவட்ட பள்ளி ஒன்றில், மாணவி ஒருவர் பயன்படுத்தப்பட்ட Sanitary Pad தவறுதலாக கழிவறையில் விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தினை அடுத்து குறிப்பிட்ட மானவியினை கண்டுபிடிக்க அப்பள்ளி ஆசிரியை மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை செய்துள்ளார். இந்த விவரம் வெளியில் தெரிந்ததை அடுத்து விஷயம் பெரியாகியுள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியயை பணியிடமாற்றம் செய்து பஞ்சாப் முதல்வர் அமரேந்திர் சிங் உத்தரவிட்டுள்ளார்!  இந்த விவகாரத்தினை அடுத்து அப்பள்ளி மாணவிகள் கல்வி நிற்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.


Advertisement