மதுபோதையில் லாரி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்: தண்டவாளத்தில் லாரியை இயக்கியதால் பதறிப்போன மக்கள்..!

மதுபோதையில் லாரி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்: தண்டவாளத்தில் லாரியை இயக்கியதால் பதறிப்போன மக்கள்..!


Punjab Ludhiana Lorry Driver Park Lorry on Railway Track 

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரில், லாரியை இயக்கி வந்த ஓட்டுநர் இரயில் தண்டவாளத்தில் அதனை நிறுத்திவிட்டுச்சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

1 கி.மீ தூரம் லாரியை இயக்கி வந்த ஓட்டுநர், பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள், அவ்வழியாக வந்த இரயிலை எச்சரிக்கை சமிக்கை கொடுத்து நிறுத்தினர். 

மேலும், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு கொள்ளப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள், உடனடியாக லாரியை அப்புறப்படுத்தி இரயில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுனரை விரைந்து கைது செய்து நடத்திய விசாரணையில், மதுபோதையில் ஓட்டுநர் சர்ச்சை செயலை மேற்கொண்டதை உறுதி செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.