குழந்தையின் மீது விழுந்த கண்ணாடிக்கதவு: பெற்றோர் கண்முன் துள்ளத்துடிக்க பலியான 3 வயது சிறுமி.! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!

குழந்தையின் மீது விழுந்த கண்ணாடிக்கதவு: பெற்றோர் கண்முன் துள்ளத்துடிக்க பலியான 3 வயது சிறுமி.! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!


Punjab Ludhiana 3 Aged Girl Died Glass Door Fallen to Child after She Swing 

 

குழந்தைகளை வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது. ஆகையால், அஜாக்கிரதையாக குழந்தைகளை உலாவவிடும் பெற்றோருக்கு, இந்த சம்பவம் எச்சரிக்கை பாடமாக அமைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா, பெசன்ட் அவென்யூ பகுதியை சேர்ந்த தம்பதி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்களின் 3 வயது குழந்தையுடன் ஷோரூமுக்கு சென்றுள்ளனர். 

கண்ணாடி கதவு விற்பனை செய்யப்படும் ஷோரூமுக்கு சென்ற தம்பதிகள், அங்கிருந்த பொருட்களை பார்த்துக்கொண்டு இருந்தனர். சிறுமியும் அங்கிருந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தவாறு விளையாடிக்கொண்டு இருந்தார். 

அச்சமயம் சிறுமியின் பெற்றோர் மற்றும் கடையின் ஊழியர்கள் சிறிது தொலைவில் இருந்த பொருளை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். சிறுமி கதவை பிடித்து ஆட்டியபடி விளையாடினார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, கதவு சிறுமியின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனைக்கண்ட ஊழியர்கள் மற்றும் பெற்றோர் பதறியபடி கதவை தூக்கியபோது, சிறுமி நிகழ்விடத்திலேயே உயிருக்கு துடிதுடித்தது நடந்துள்ளது. 

அவரின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று அவசர கதியில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, சிறுமி முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமி பலியான பதைபதைப்பு காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.