இந்தியா

செருப்பு மாலை,எருமை மீது ஊர்வலம் இளைஞனுக்கு கிராமத்தினர் கொடுத்த மோசமான தண்டனை , அப்படி என்ன கேவலமா செயலை அவர் செய்தார் தெரியுமா?

Summary:

செருப்பு மாலை,எருமை மீது ஊர்வலம் இளைஞனுக்கு கிராமத்தினர் கொடுத்த மோசமான தண்டனை , அப்படி என்ன கேவலமா செயலை அவர் செய்தார் தெரியுமா?

இளைஞன் ஒருவன் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கிராமத்தினர் செருப்பு மாலை அணிவித்து எருமை மாட்டின் மீது ஏற்றி ஊர்வலமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் எட்டு வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இது குறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராமவாசிகள் அனைவரும் ஒன்றாக  சேர்ந்து அந்த  இளைஞனின் முகத்தில் கரியை பூசி, அவருக்கு செருப்பால் மாலை அணிவித்து எருமை மாட்டின் மீது ஏற்றி கிராமம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதை தொடர்ந்து, அப்பகுதி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement