டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
பெத்த 2 புள்ளைங்கள காப்பாத்திட்டு அம்மா மாட்டிகிட்டாங்களே! என்னால ஓட முடியல... தயவுசெஞ்சு இதுக்கு ஒரு ஆக்சன் எடுங்க! திக் திக் வீடியோ..!!!
புனே இரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பாட்டஸ் ரயில் நிலையத்தில், நகரத் தொடங்கிய சரக்கு ரயிலுக்கு அடியில் படுத்து பெண் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இரு குழந்தைகளுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாட்டஸ் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இல்லாததால், பயணிகள் நேரடியாக தண்டவாளத்தைக் கடந்துதான் நடைமேடைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை, ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் திடீரென நகரத் தொடங்கியது.
குழந்தைகளை காப்பாற்றிய தாயின் நொடிப்பொழுது முடிவு
ரயில் நகரத் தொடங்கியதும், அந்தப் பெண்ணின் இரு குழந்தைகளும் விரைவாக நடைமேடைக்குப் பாய்ந்து சென்றனர். ஆனால் அந்தப் பெண்ணால் உடனடியாக நகர முடியவில்லை. ரயில் வேகம் எடுப்பதை பார்த்த அவர், உயிர் பிழைக்க ஒரே வழியாக இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவே தரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? சாகசம் செய்யவதற்கு ஹீரோ போல் பைக் ஓட்டின இளைஞர்! அப்புறம் நடந்த ட்விஸ்ட் தான் ஹைலைட்.... செம காமெடி காட்சி !!!
அடுத்த சில நிமிடங்கள் அங்கிருந்த பயணிகள் பதற்றத்தில் உறைந்துபோனதாக கூறப்படுகிறது. முழு சரக்கு ரயிலும் அவரது மேல் கடந்து சென்ற பிறகே அச்சம் குறைந்தது. பின்னர் அந்தப் பெண் எந்தக் காயமும் இல்லாமல் எழுந்து வந்ததை பார்த்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
“மேம்பாலம் இல்லாததே காரணம்”
சம்பவத்திற்குப் பிறகு பேசிய அந்தப் பெண், “எப்படியோ என் குழந்தைகளை தள்ளிவிட்டேன். என்னால் நகர முடியவில்லை. அதனால் தண்டவாளத்தின் நடுவே படுத்துக் கொண்டேன். இங்கு நடை மேம்பாலம் இல்லாததால் தான் இப்படியான நிலை ஏற்பட்டது. பயணிகளின் பாதுகாப்புக்காக உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் கண்டனம்
போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே இப்படியான ஆபத்தான சூழ்நிலைகளுக்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக நடை மேம்பாலம் இல்லாததால் தினமும் பலர் உயிர் ஆபத்துடன் தண்டவாளத்தை கடக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த திக் திக் காட்சி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
अचानक मालगाडी सुरू; रूळ ओलांडताना महिला घाबरून मध्यभागी झोपली, पाटस रेल्वे स्थानकातील घटना#pune #patas #railway #government #women pic.twitter.com/FYMWsaLBPF
— Lokmat (@lokmat) May 9, 2026
இதையும் படிங்க: பலத்த சூறைக்காற்று! மாட்டை அவிழ்த்து விடும் அந்த நேரத்தில் துரத்திய மரணம்! நூலிழையில் உயிர் தப்பிய திகில் காட்சி!!!