தமிழகம் இந்தியா Covid-19

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம்! புதுச்சேரி முதல்வர் அதிரடி!

Summary:

puduchery cm announced 1 lakh for corona died family

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,421 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இன்று மட்டும் புதுச்சேரியில் புதிதாக 123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் இன்று மட்டும் அங்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில்  சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அமைச்சர்கள், காங்கிரஸ், அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


Advertisement