ஃப்ரீ ஃபயர் விளையாட ரீசார்ஜ் செய்யாத தாய்.. தனிமையில் இருந்த சிறுவன் தற்கொலை.!

ஃப்ரீ ஃபயர் விளையாட ரீசார்ஜ் செய்யாத தாய்.. தனிமையில் இருந்த சிறுவன் தற்கொலை.!


pudhucherry 17 years boy suicide for free fire

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் அருகே வீராம்பட்டினத்தில் வசித்து வரும் பச்சை வள்ளி என்பவர் தனியார் ஜவுளி கடை ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் கணவர் அருள் தாஸ் 7 மாதங்களுக்கு முன் மீன்பிடிப்படகில் அடிபட்டு உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், மூத்த மகன் கமலேஷ் (17 வயது) புதுச்சேரியில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். வீட்டில் இருக்கும் நேரங்களில் கமலேஷ் எப்போதும் செல்போனில் பிரீ பையர் கேம் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். 

pudhucherry

வழக்கம் போல நேற்று கேம் விளையாட சென்ற கமலேஷ் செல்போனில் நெட் பேக் ரீசார்ஜ் செய்யவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளார். எனவே, கேம் விளையாட முடியவில்லை என்று ரீசார்ச் செய்ய தாயிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தாய் வேலைக்கு சென்று விட்டு மாலை வந்தவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார். எனவே, வீட்டில் இருந்த கமலேஷ் அன்றைய தினம் கேம் விளையாட முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பதற்றத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். 

pudhucherry

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு கமலேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் வேலைக்கு சென்று இருந்த பச்சை வள்ளிக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அலறி அடித்து ஓடி வந்து மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அவர் கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.