"சொத்த அவளுக்கா கொடுக்கிற... " உறவினருடன் சேர்ந்து கணவனை கொன்ற இரண்டாம் மனைவி.!!



property-dispute-turns-deadly-second-wife-arrested-for

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தை சேர்ந்த ராம்பாலி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி உத்திரப்பிரதேச வாரணாசியில் வசித்து வருகிறார். ராம்பாலி தனது இரண்டாவது மனைவியுடன் ராஞ்சியில் வசித்து வருகிறார்.

 சில நாட்களாகவே ராம்பாலி காணாமல் போயிருந்ததால் அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வந்த போது இரண்டாவது மனைவி சம்பா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் சம்பாவிடம் தீவிர விசாரணையை மேற்கொண்ட போது ராம்பாலியை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக அவரது இரண்டாவது மனைவி ஒப்புக்கொண்டார்.

India

இதன்படி அவர் அளித்த வாக்குமூலத்தில் ராம்பாலி தனது சொந்த நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விற்று அந்த பணத்தை வாரணாசியிலுள்ள முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். இதையறிந்த சம்பா கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் உறவினர் விஷ்ணுவுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார். பின்னர் தனது கணவரின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார்.

இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!

கணவரை கொலை செய்த குற்றத்திற்காக சம்பா மற்றும் விஷ்ணு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புதைக்கப்பட்ட ராம்பாலியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!