புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இளம் பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய நபர்! சில நாள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி!
ஆன்லைன் வீடியோ கால் செய்து ஆண்களிடம் ஆபாசமாக பேசி, அவர்களின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்து, மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நொய்ட்டாவை சேர்ந்த நபர் ஒருவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் பிரபல ஆன்லைன் டேட்டிங் ஆப் ஒன்றில் தனது விவரங்களை பதிவு செய்து, அந்த ஆப்பிள் உள்ள சில பெண்களுடன் சாட் செய்து வந்துள்ளார். அதில் ஒருபெண் அந்த நபருடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் அந்தப் பெண், அந்த நபரை நிர்வாணமாக வீடியோ காலில் வரும்படி ஆசைவார்த்தை கூற, அந்த நபரும் நிர்வாணமாக அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். இதனை அந்த பெண் ரெக்கார்ட் செய்தநிலையில் சிலநாள் கழித்து அந்த நபருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில், உங்களின் நிர்வாண வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், உடனே 50 ஆயிரம் பணம் தருமாறும், பணம் தரவில்லை என்றால் வீடியோவை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், தன்னால் 50 ஆயிரம் தர முடியாது, வேண்டுமென்றால் 5 ஆயிரம் தருவதாக கூறி அவர்களுக்கு 5 ஆயிரம் பணமும் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் அந்த கும்பல் அவரை தொடர்ந்து மிரட்டி, பணம் வசூலிக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட நபர் இது குறித்து போலீசில் புகாரளித்தார். இதனை தொடர்ந்து நொய்டா காவல்துறை தகவல் தொழில்நுட்பப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.