இதற்கெல்லாம் அவர் பயம்கொள்ளமாட்டார் - ராகுல் காந்திக்கு ஆதரவாக பாய்ந்த பிரியங்கா காந்தி..!Priyanka Gandhi tweet about Rahul Gandhi

பிரதமர் அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராகுலுக்கு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு பேசினார். 

இதுகுறித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், இன்று ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை வழங்கிய அதே நீதிமன்றத்தில் 30 நாட்கள் முன்ஜாமீனும் பெறப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிரியங்கா காந்தி ட்விட் பதிவு செய்துள்ளார். 

அந்த ட்விட்டர் பதிவில், "என் சகோதரன் இதற்கெல்லாம் பயம் கொள்ளமாட்டார். அச்சம் தரும் அதிகாரத்தின் அரச இயந்திரம், ராகுல் காந்தியுடைய குரலை நசுக்க முயற்சி செய்கிறது.

மக்களின் அன்பும், ஆதரவும் சகோதரர் ராகுல் காந்திக்கு இருக்கிறது. உண்மைக்காக அவர் எப்போதும் குரல் கொடுப்பார்" என கூறியுள்ளார்.