பல லட்சக்கணக்கில் திருமண ஏற்பாடு! மூக்கு பெரிதாக உள்ளதால் பாதியிலேயே ஓட்டமெடுத்த மணப்பெண்!

பல லட்சக்கணக்கில் திருமண ஏற்பாடு! மூக்கு பெரிதாக உள்ளதால் பாதியிலேயே ஓட்டமெடுத்த மணப்பெண்!



pride not accept marrige for large nose


பெங்களூரு கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் அமெரிக்காவில் சப்ட்வெர் இன்ஜினியராக வேலை செய்து வரும் ராஷ்மி என்ற பெண்ணுக்கும் இணையதளம் மூலம் திருமணம் செய்ய குடும்பத்தினர் வரன் பார்த்துள்ளனர். 

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்து கணவரி 30 ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சம் செய்தனர்., இதனையடுத்து இவர்களுக்கு திருப்பதியில் திருமணம் செய்வதற்கு முடிவு செய்தனர். இதனால் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் தங்குவதற்காக 70 அறைகள் முன்பதிவு செய்தனர்.

மேலும் திருமண நிகழ்ச்சிக்கு சமையல் ஏற்பாடுகளும், ஆடைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் என லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனர். இந்தநிலையில் திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார் மணப்பெண். அவர் குடும்பத்தினரிடம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்தை நிறுத்தி விடுங்கள் எனக் கூறியுள்ளார்.  

pride

இதனைக்கேட்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மணமகன் வீட்டார்கள் திருமணத்திற்கு விருப்பம் இல்லாததற்கு காரணம்  என்னவென்று கேட்டுள்ளனர். அதற்கு மணமகனின் மூக்கு பெரிதாக உள்ளதால் எனக்கு பிடிக்கவில்லை என மணப்பெண் கூறியதாக தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி மணப்பெண் மற்றும் அவரது பெற்றோர்  மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.