
இப்படியெல்லாம் செய்யலாமா?? விபரீதத்தில் முடிந்த விளையாட்டு! கணவனை மிரட்ட செய்த காரியத்தால் துடிதுடிக்க உயிரிழந்த கர்ப்பிணி!
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே ஆசாரி பரம்பு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீலஷ்மி என்ற பெண்ணை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் துபாய்க்கு சென்ற அவினாஷ், கடந்த 4 மாதங்களுக்கு முன் ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் லக்ஷ்மி கருவுற்றிருக்கிறார். அதனால் தனது மனைவியோடு இருக்க விரும்பிய அவர் துபாய்க்கு திரும்ப செல்வதை தள்ளி வைத்துள்ளார். ஆனால் லக்ஷ்மி நமக்கு கடன் இருக்கு, செலவு இருக்கு, ஊருக்கு செல்லுங்கள் என கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் அவினாஷ் எனக்கு 3 மாதம் லீவ்.கொரோனா காரணமாக போக முடியவில்லை என பொய் கூறி லக்ஷ்மியை நம்ப வைத்துள்ளார். ஆனால் பின்பு இது பொய் என லக்ஷ்மிக்கு தெரியவந்த நிலையில், கோபமடைந்த லக்ஷ்மி வாயில் விஷத்தை ஊற்றி ஏமாற்றி கணவரை ஊருக்கு செல்லுமாறு மிரட்டியுள்ளார்.
உடனே பதறிப்போன அவினாஷ் தான் துபாய் செல்வதாக கூறியுள்ளார். அப்படியென்றால் என் தலையில் அடித்து சத்தியம் செய்யுங்கள் என லக்ஷ்மி கூற அவரது வாயில் விஷம் இருக்கும்போது அவினாஷ் தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார். அப்பொழுது தவறுதலாக ஸ்ரீலஷ்மி விஷத்தை குடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement