இந்தியா

காலையில் கண்விழித்த கணவர்! மயமான மனைவி! கடைசியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.

Summary:

Pravin tikku

உத்திர பிரதேச மாநிலத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம். இவரின் மகன் பிரவீன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. மேலும் இவர்களது திருமணம் டிங்கு என்ற ப்ரோக்கர் மூலம் நடத்துள்ளது. 

இதனை அடுத்து பிரவீன் திருமணம் முடித்து 3 நாட்களுக்கு பிறகு தனது மனைவியுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் அவருக்கு பெண் பார்த்து கொடுத்த டிங்குவும் வந்தார். 

அன்று இரவு பிரவீன் மனைவி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவளித்துள்ளார். சாப்பிட்ட அனைவரும் உடனே தூங்கிவிட்டனர். காலையில் தூங்கி எழுந்து பார்த்த கணவர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர். 

காரணம் வீட்டில் உள்ள பணம், நகை அனைத்தையும் எடுத்து கொண்டு தரகர் டிங்குவுடன் மாயமானது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தான் மனைவி தரகருடன் ஓட்டம் பிடித்தது கணவருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வு குறித்து பிரவீன் கூறுகையில் என் மனைவி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் 4 லட்சம் செலவு செய்து திருமணத்தை நிறைவேற்றியதாகவும், மேலும் அந்த பெண் ஏழை வீட்டு பெண் என்பதால் தகரிடம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் இவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். 

 

 

 

    


Advertisement