உச்சகட்ட மகிழ்ச்சியில் மூழ்கிய சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ்ராஜ்! என்ன காரணம் தெரியுமா!!

உச்சகட்ட மகிழ்ச்சியில் மூழ்கிய சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ்ராஜ்! என்ன காரணம் தெரியுமா!!


prakashraj happy in voting at his classroom

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய குடிமக்கள் அனைவரும், தனது தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதை தவறாமல் செய்தனர். மேலும் இதற்காக இந்தியாவின் பல பகுதியில் இருந்த மக்களும், தங்களது சொந்த ஊருக்குச் சென்று முக்கிய பணியாக தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

மேலும் திரை பிரபலங்களும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தனர். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், தங்களது வாக்களித்த அனுபவம் குறித்தும் பல நடிகர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

Prakashraj

 இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லன் நடிகராக அசத்தியவர் பிரகாஷ்ராஜ். இவர்  மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் வாக்களித்த பின் தனது அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் அவர்,எனது பள்ளியில் 41 ஆண்டுகளுக்கு முன்பு எந்த வகுப்பறையில் அமர்ந்து இருந்தேனோ, அதே இடத்தில் இன்று எனது வாக்கை நான் செலுத்தினேன். மறக்க முடியாத நினைவுகள், புது பயணம் என பதிவிட்டிருந்தார். 

இதனை கண்ட பிரகாஷ்ராஜின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.