இந்தியா

வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி.! அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்.. சாலையோரம் பிறந்த குழந்தை.!

Summary:

Pragent lady

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையில் பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்துள்ளார். அவரை அவரது உறவினர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் இரவில் நோயாளிகளை அனுமதிக்கும் நேரம் முடித்து விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் அந்த பெண் இந்த பகுதியை சேர்ந்தவர் கிடையாது என்று கூறியும் அந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர். வலியால் துடித்த அந்த பெண்ணுக்கு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் உறவினர்களே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் சாலையில் பிரசவித்த நிகழ்வுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement