
பெற்றோர் செல்போனை பிடுங்கியதால் ஆத்திரம்.. 16 வயது சிறுமி விபரீதம்.. துடிதுடித்து பலியான உயிர்.!
மகளை படிப்பில் கவனம் செலுத்தக்கூறி செல்போனை தாய் பிடுங்கி வைத்த நிலையில், மனவேதனையடைந்த சிறுமி எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை, சில்லுக்காரிபாளையம் மயிலம் பாதை கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் சாலைப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவரின் மனைவி புஷ்பவதி. இந்த தம்பதிகளின் மகள் ஷகி (வயது 16) திருபுவனையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் இருக்கும் நேரத்தில் ஷகி எப்போதும் செல்போனை உபயோகம் செய்தவாறே இருந்து வந்துள்ளார். இதனைகவனித்த ஷகியின் தாயார் புஷ்பவதி, மகளை கண்டித்து இருக்கிறார். மேலும், படிப்பில் கவனம் செலுத்தக்கூறியும் அறிவுறுத்தி இருக்கிறார்.
சம்பவத்தன்று மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு வந்த ஷகி செல்போனை உபயோகம் செய்த நிலையில், தாய் அதனை கண்டித்துள்ளார். பொதுத்தேர்வை சுட்டிக்காட்டி படிப்பில் கவனமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷகியிடம் இருந்து அவரின் செல்போனையும் பறித்து வைத்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன ஷகி தற்கொலை செய்ய எண்ணி, வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டு இருக்கிறார். கடந்த 2 நாட்களாக அவரின் உடல் முழுவதும் விஷம் ஏறிய நிலையில், திடீரென அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாய் மகளிடம் கேட்டபோது ஆவேசத்தில் எலிமருந்தை நின்றுவிட்டேன் என்று சொல்லியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஷகியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ஷகிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக திருபுவனை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement