கோவில் திருவிழா முன்னேற்பாடு பணிகளில் பரிதாபம்: பந்தல் சரிந்து விழுந்து 2 பேர் பரிதாப பலி.!

கோவில் திருவிழா முன்னேற்பாடு பணிகளில் பரிதாபம்: பந்தல் சரிந்து விழுந்து 2 பேர் பரிதாப பலி.!


Pondicherry Temple Festival Arrangement 2 Died

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதிவீதியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். வருடம்தோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படும். கொரோனா காலத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது அனைத்தும் விளக்கிக்கொள்ளப்பட்டு, பிரம்மாண்டமாக திருவிழா கொண்டாட திட்டமிடப்பட்டு இருந்தது. 

இதனையடுத்து, கடந்த 16 ஆம் தேதி பந்தக்கால் நாட்டப்பட்டு, மே மாதம் 7 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகளை அறங்காவல் குழுவினர் மேற்கொண்டு வந்தனர். கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணியில் கதிர்காமம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மேற்பார்வையில் தொடங்கியது. 

Pondicherry

கோவில் வீதி சந்திப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணியில் மணியின் மகன் ராஜ்குமார் (வயது 33), தொழிலாளர்கள் லட்சுமணன் (வயது 40), முத்துலிங்கம் (வயது 38), ஆறுமுகம் (வயது 60), சக்திவேல், காந்தி, செல்வம் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். 30 அடி உயரம் கொண்ட பந்தலை அமைக்க, வேலு, ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் ஓலை கட்டிக்கொண்டு இருந்தனர். சக்திவேல் மற்றும் காந்தி, செல்வம் ஆகியோர் அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொடுத்துக்கொண்டு இருந்தனர். 

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பந்தல் சரிந்து விழுந்த நிலையில் ராஜ்குமார், ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜ்குமார் மற்றும் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தனர். பிறர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விஷயம் தொடர்பாக பெரியக்கடை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.