அடக்கொடுமையே.. 8 வயது சிறுவனையுமா?.. 21 வயது இளைஞனின் பதறவைக்கும் செயல்.! போக்ஸோவில் கைது..!!

அடக்கொடுமையே.. 8 வயது சிறுவனையுமா?.. 21 வயது இளைஞனின் பதறவைக்கும் செயல்.!


pondicherry-karaikal-8-aged-minor-boy-sexual-harassed-b

வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த 8 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 21 வயது இளைஞன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், திருப்பட்டினம் வி.எஸ் நகரில் வசித்து வருபவர் குருபிரசாத் (வயது 21). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவனின் வீட்டருகே 8 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவனை கவனித்த பிரசாத், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக அழைத்து, ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். 

Pondicherry

பின்னர், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சொல்லி அனுப்பி வைத்துள்ளான். சிறுவனும் என்ன நடந்தது என தெரியாமல் இருக்க, இப்படியாக இரண்டாவது நாள் கொடூரன் தனது செயலை அரங்கேற்றியுள்ளான். 

இதனால் பதறிப்போன சிறுவன் பெற்றோரிடம் குருப்ரசாத்தின் நடவடிக்கையை சைகை மூலமாக கூறி அழுதுள்ளான். பதறிப்போன பெற்றோர் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து குருப்ரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.