திருமண பெண் மாயம்.. வாட்ஸப்பில் வந்த ஆடியோவால், ஆடிப்போன குடும்பத்தினர்.! கண்ணீர் குமுறல்.!!

திருமண பெண் மாயம்.. வாட்ஸப்பில் வந்த ஆடியோவால், ஆடிப்போன குடும்பத்தினர்.! கண்ணீர் குமுறல்.!!


Pondicherry Karaikal 21 Aged Girl Missing She Drop WhatsApp Audio for Family

நிச்சயம் செய்யப்பட்ட பெண் திடீரென மாயமான நிலையில், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் வேலைக்கு செல்கிறேன் என வாட்ஸப்பில் ஆடியோ அனுப்பி பெண் மாயமான சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், கோட்டுச்சேரி கொன்னகாவலி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 42). இவரின் மூத்த மகள் அபிராமி (வயது 21). அபிராமிக்கும் - அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பிப்ரவரி 7 ஆம் தேதி திருமண நாள் குறிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இருவீட்டாரும் திருமண ஏற்பாடு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு இருந்த நிலையில், உற்றார் - உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி அபிராமி தன்னுடன் படித்த தோழிகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். 

பின்னர், இரவில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் மாயமான நிலையில், அதிர்ச்சியடைந்த பழனியப்பன் குடும்பத்தினர் மகளை தேடியுள்ளனர். மேலும், அவரின் தோழிகளின் வீட்டிற்கு சென்று விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. அவரின் செல்போனும் ஸ்விச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

Pondicherry

இந்த நிலையில், அபிராமி தனது தங்கை ரோஷினிக்கு வாட்ஸப்பில் ஆடியோ அனுப்பியுள்ளார். ஆடியோவில், "எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் சென்னையில் தங்கியிருந்து வேலைக்கு செல்ல போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த ஆடியோ தகவல் தெரியவந்ததும் வீட்டில் பீரோவில் சோதனை செய்கையில், அபிராமி தனது படிப்பு சான்றிதழ், அடையாள அட்டை, ஆடைகளை தன்னுடன் எடுத்து சென்றது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக அபிராமியின் பெற்றோர் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் அபிராமியை தேடி வருகின்றனர்.