இந்தியா

எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்..! தாய் வைத்த ஆவேச கோரிக்கை..! பதறவைக்கும் சம்பவம்.!

Summary:

Police should kill my son mother angry interview

தன் மகனை போலீசார் சுட்டு கொல்ல வேண்டும் என பயங்கரவாதி ஒருவனின் தாய் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

கான்பூரில் போலீசார் ரவுடி கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தபோது அந்த ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பரிதாபமாக சுட்டு கொல்லப்பட்டனர். நாட்டையே அதிர்ச்சியடைய வைத்த இந்த கோர சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவன் விகாஷ் துபே.

1993 ஆம் ஆண்டு முதல் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கடத்தல் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த விகாஷ் துபே கடந்த 2001 ஆம் ஆண்டு காவல் நிலைய வளாகத்திற்க்குள்ளையே அன்றைய பாஜகவின் முக்கிய பிரமுகர் மற்றும் அப்போதைய அமைச்சரான சந்தோஷ் சுக்லாவை சுட்டு கொலை செய்த கும்பலின் முக்கிய குற்றவாளி.

இவர் மீது 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளநிலையில் விகாஷ் துபே உத்திரப்பிரதேசத்தின் முக்கிய தேடப்படும் குற்றவாளி. தற்போது உத்திரப்பிரதேச போலீசார் விகாஷ் துபேவை எப்படியும் கைதுசெய்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில்  தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே விகாஷ் துபேவின் தாய் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், என் மகனை போலீசார் சுட்டு கொல்ல வேண்டும் என கூறியுள்ளார். போலீசாரை சுட்டு கொன்ற சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன், போலீசாரை கொலை செய்து என் மகன் பெரும் குற்றம் செய்துள்ளான்.

அவனுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும், போலீசார் அவனை சுட்டு கொல்ல வேண்டும் என அந்த பேட்டியில் விகாஷ் துபேவின் தாய் கூறியுள்ளார்.


Advertisement